கள்ளக்காதல் ஊருக்கு தெரிந்ததால் அவமானம் அடைந்த கல்லூரி மாணவர், 43 வயதான பெண்ணுடன் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் மாது (எ) பாரத் (26). கோவை தனியார் கல்லூரியில் பிஏ
(ஆங்கிலம்) 2ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், தீர்த்தமலை அருகே பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டியில் கல்யாணம் நடப்பதாக இருந்தது.
(ஆங்கிலம்) 2ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், தீர்த்தமலை அருகே பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டியில் கல்யாணம் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி பாரத் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். 29ம் தேதி பாரத்தை அவரது அப்பா தொடர்பு கொண்டபோது, போன் ”சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அடுத்த நாள் பாரத்தின் பெற்றோர், கல்லூரிக்கு சென்று விசாரித்தனர். பாரத் கடந்த 10 நாட்களாக கல்லூரிக்கு வராதது தெரிந்தது. இதுகுறித்து மணமகள் வீட்டாருக்கு தெரிவித்தனர்.
உறவினர்களுக்கு பத்திரிகை வைத்த நிலையில் செய்வறியாது திகைத்தனர். இதையடுத்து, அதே திருமண தேதியில் பெண்ணுக்கு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் மாயமான மகன் குறித்து பாரத்தின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர். இதில் மகனுக்கு கள்ளக்காதல் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அண்ணாநகரை சேர்ந்தவர் ஜோதி (43). இவருடைய மகன் கார்த்திகேயன் (26), பாரத் படிக்கும் கல்லூரியில் படித்துள்ளார். ஒரே கல்லூரி என்பதாலும், பக்கத்து வீடு என்பதாலும் கார்த்திகேயன் வீட்டுக்கு பாரத் அடிக்கடி சென்றுள்ளார். அப்போது கார்த்திகேயன் அம்மா ஜோதிக்கும், பாரத்துக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால்தான் பாரத் திருமணத்துக்கு முன்பு மாயமானது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாரத் வீடு திரும்பினார். வீட்டில் அழுது புலம்பியபடி இருந்த பெற்றோர், பாரத்தை பார்த்ததும் கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.
அதே சமயம் பாரத்தின் கள்ளக்காதல் விவகாரம் ஊர் முழுவதும் பரவியிருந்தது. இதனால் விரக்தி அடைந்த பாரத், ஜோதி வீட்டுக்கு நேற்று நள்ளிரவில் சென்றுள்ளார். கள்ளக்காதல் விவகாரம் ஊருக்குத் தெரிந்து விட்டது. இதனால் அவமானம் ஏற்பட்டு விட்டது. எனவே நாம் இனி வாழ வேண்டாம்.. இறந்து விடலாம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் சேலையில் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக