கிறிஸ்துவ மதத்தின் கோட்டை என அழைக்கப்பட்ட பிரித்தானியாவில் சமீப ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் சம்பவங்கள் எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.2030 ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியா கிறிஸ்தவ நாடு என்கிற அந்தஸ்தை இழந்துவிடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மூத்த மதங்களில் ஒன்றான இந்துசமயத்தை தழுவுவோர்களின் எண்ணிக்கை என்றும் இல்லாதவாறு அதிகரித்து வருகின்றது.இந்துக்களும், முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் வேலை, படிப்புக்காக பிரித்தானியாவில் குடியேறுகின்றனர்.இதை தடுக்க விசா வழங்கும் நடைமுறைகளை கடுமையாக்கி வருகிறது பிரித்தானிய அரசு.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தொழிலாளர் அமைப்பின் புள்ளி விபரங்கள் என்ற அமைப்பு தனது ஆய்வின் முடிவுகளை (Labour Force Survey) பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான டெயிலி மெயில் செய்தியாகப் பிரசுரித்துள்ளது.
ஆய்வு முடிவுகளின் படி பிரித்தானியாவில் இருந்து ஒவ்வோராண்டும் சராசரியாக 5 இலட்சம் மக்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே வேளை மதத்தை மறுத்து, மதம் ஒன்று இல்லை என்ற கோட்பாட்டின் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் ஏழு இலட்சத்துக்கும் அதிகமாக அதிகரித்து வருகின்றது.
இப்படியாக கிறிஸ்துவ மதம் அதல பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கையில் இந்துக்களும், முஸ்லிம்களும், பௌத்த சமயத்தை சேர்ந்தோர்களும் என்றும் இல்லாதவாறு அதிகரித்து வருகின்றனர்.
2004 – 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆறு ஆண்டு கால இடைவெளியில் இந்துக்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக அதிகரித்து ஏழு இலட்சத்து 90 ஆயிரமாக மாறியுள்ளது. பௌத்தர்களின் எண்ணிக்கை 74 சதவீதமாக அதிகரித்து 2 இலட்சத்து 70 ஆயிரமாக மாறியுள்ளது.
ஆண்டுதோறும் 5 லட்சம் கிறிஸ்தவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
ஆனால், மற்ற மதத்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
யூதர்கள், சீக்கியர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக