புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மாங்குளம் பகுதியில் 4 வயதுச் சிறுமி பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சிறுமி கடைக்குச் சென்றபோது வலுக்கட்டாயமாக பிடித்து மேற்படி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந் நபரை மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோட்டைகட்டியகுளம் பகுதியிலுள்ள கடையொன்றிற்கு நான்கு வயது சிறுமியொருவர் சென்றுள்ளார்.இதன்போது அந்தக்கடையின் உரிமையாளனரான 40 வயது காமுகன் குறித்த சிறுமியை பிடித்து ஆட்கள் யாரும் அற்ற பற்றையொன்றினுள்ளே கொண்டு சென்று வைத்து பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்துள்ளான்.

இதன் பின்னர் இது தொடர்பில் தெரியவரவே அவர் தப்பியோடியிருந்தார். தப்பியோடிய அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த சிறுமி சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top