கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் பிரியங்கா (வயது 13). பிரியங்காவின் தாய் இறந்து விட்டார். பிரகாஷ், மைசூர் ஒண்டிகொப்பாவில் உள்ள வங்கி காலனியில் வசித்து பிரியங்கா மைசூர் ஜெயலட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 ம்
வகுப்பு படித்து வந்தாள். பள்ளித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் பிரியங்காவை ஒண்டிகொப்பா அருகில் உள்ள கோவில் முன்பு பள்ளி சீருடையுடன் இரவு 7 மணிக்கு பிச்சை எடுக்க வைத்துள்ளனர்.
வகுப்பு படித்து வந்தாள். பள்ளித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் பிரியங்காவை ஒண்டிகொப்பா அருகில் உள்ள கோவில் முன்பு பள்ளி சீருடையுடன் இரவு 7 மணிக்கு பிச்சை எடுக்க வைத்துள்ளனர்.
இதனை காரில் இருந்தபடியே கண்காணித்து வந்தார் பிரகாஷ். அழுதபடியே கோவில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மாணவி பிரியங்காவை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அச்சிறுமியிடம் விசாரித்த போது, பெற்ற தந்தையே இத்தகைய கொடுமையை செய்யவைத்தார் என்று புரிந்து கொண்டனர்.
இதனையடுத்து மைசூர் வி.வி.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். கோவிலுக்கு வந்த போலீசார் மாணவி பிரியங்காவை மீட்டது மட்டுமின்றி, பிரகாஷையும் கைது செய்து விசாரித்தனர். எனது மகள் பள்ளியில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவளுக்கு புத்தி வரவேண்டும் என்பதற்காக கோவில் முன்பு பிச்சை எடுக்க வைத்தேன் என்று போலீசாரிடம் கூறினார்.
இதனை தட்டிக்கேட்ட பொதுமக்களிடம் 'எனது மகளை பிச்சை எடுக்க வைப்பது என் இஷ்டம். அதை கேட்க நீங்கள் யார்' மிரட்டவும் செய்துள்ளார். பிரியங்காவை மீட்ட போலீசார் அங்குள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில சேர்த்தனர். பிரகாஷை மைசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக