நம்முடைய தகவல் பாதுக்காப்பவும் எடிட் பண்ண முடியாமலும் இருக்க நாம் பைல்களை PDF ஆக உருவாக்கி இணையதளத்திலோ அல்லது நண்பர்களிடமோ பகிர்வோம். அந்த PDF பைல்களில் உங்களுடைய பெயரையோ அல்லது உங்கள் இணையதளத்தின் பெயரையோ Water Mark ஆக
போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
போட வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.
தளத்தின் சிறப்பம்சங்கள்:
பயனர்கள் மிகவும் சுலபமாக செயல்படுதும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 20mb உள்ள பைல் வரை வாட்டர்மார்க் போடலாம்.
இது முழுக்க முழுக்க இலவச சேவை
வாட்டர் மார்க் நிறத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
உபயோகிக்கும் முறை:
கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும் அதில் Choose File என்ற ஒரு விண்டோ வரும் அதில் கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
உங்கள் வாட்டர்மார்க் வர வேண்டிய இடம், வாட்டர்மார்க் நிறம் மற்றும் Transparency தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Watermark Pdf பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது உங்கள் PDF பைலின் மீது வாட்டர் மார்க் இடப்பட்டால் உங்களுக்கு கீழே இருப்பதை போன்ற ஒரு அறிவிப்பு வரும்.
படத்தில் காட்டி இருப்பது போல வந்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள Click Here என்ற லிங்கை கிளிக் செய்தால் உங்களுக்கான PDF பைல் தயாராகிவிடும்.
பிறகு அதில் உள்ள Save பட்டனை அழுத்தி வாட்டர் மார்க் போட்ட PDF பைலை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக