புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மன் போக்குவரத்து அமைச்சர் அண்மையில் வெளியிட்ட புதிய  ஒழுங்குவிதிகளின் படி வாகனசாரதிகளில் 10வீதமானவர்கள் தங்கள் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பறிகொடுக்க உள்ளனர்.  ஜெர்மன் போக்குவரத்து அமைச்சர் பேற்ரர் ரம்சௌர்  போக்குவரத்து மீறல் புள்ளிகள் தொடர்பான புதிய
ஒழுங்குமுறை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு வருடமும் விரைவு வேகத்தில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளில் 10 சதவீதத்திற்கு அதிகமானோர் தங்கள் வாகன சாரதி அனுமதி பத்திரங்களை இழக்க வேண்டி நேரிடலாம்.

நாட்டின் போக்குவரத்து அதிகார சபை அமைந்துள்ள வடக்கு நகரான ப்லென்பேர்க்கில் கவனயீனமாக சாரதிகள் கூடுதல் புள்ளிகளை பெறவேண்டியிருக்கும்.

வீதி மீறல் தொடர்பான புள்ளிகள் கணக்கிடப்படும்போது அவர்கள் தங்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக இழக்க நேரிடலாம். முன்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு 18 புள்ளிகள் தேவையாக இருந்தது. இனி எட்டுப்புள்ளிகள் மாத்திரம் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ நியாயமானதும் இலகுவானதும் கூடுதல் வெளிப்படையானதுமான ஒரு திட்டத்தை உருவாக்குவதே எமது தேவையாகும்’ என்று போக்குவரத்துதுறை அமைச்சர் பெர்லினில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

தங்களுடைய அனுமதிப்பத்திரங்களை இழப்பதற்கு எவ்வளவு கொஞ்சம் புள்ளிகளுக்கு அருகில் தாம் நிற்கின்றோம் என்பதை கண்ணால் பார்ப்பதற்கு உதவுமுகமாக வடிவமைக்கப்பட்ட இராட்சத அளவு கருவி ஒன்றை அமைச்சர் வாகன சாரதிகளுக்கு வழங்கினார்.

1 இலிருந்து 5 புள்ளிகள் பச்சை நிறத்தில் இருக்கும். 4இலிருந்து 5 வரை மஞ்சளில் இருக்கும். 6 இலிருந்து 7 வரை சிவப்பு நிறத்தில் இருக்கும். சாரதிகளுக்கான  கருத்தரங்குக்கான அழைப்பும் அத்துடன் வரும். 8 க்கு மேற்பட்ட புள்ளிகள் கறுப்பு நிறத்தில் வரும். கறுப்பு நிறத்தில் வந்தால் அவர் கால்நடையாகவோ அல்லது பஸ்ஸில்தான் பயணிக்க வேண்டி வரும், கறுப்பு நிறத்திற்கு வந்தவுடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு விடும்.

2013 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரவருக்கும் இச்சீர்திருத்தத்தினால் மீறல் புள்ளிகளை குறைப்பதற்காக திருத்த வகுப்புக்களுக்கு செல்லும் வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும். ‘ புள்ளிகளில் கழிவு போக்குவரத்து காடைத்தனக்கார்களுக்குக்
கிடைக்காது’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆண்டு தோறும் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை பத்து சத வீதத்தினால் அதிகரிக்கும் என்று போக்குவரத்து அமைச்சு மதிப்பிட்டுள்ளது. ஆனால் பதிவு செய்யப்பட்ட போக்குவரத்து குற்றங்கள் அபாயகரமான சாரத்தியத்தை உள்ளடக்குவதாக அமையும். 

குடித்து விட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தை பறித்து வைத்திருக்கும் கால எல்லை 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கும்.

எவராவது குற்றங்களுக்களுக்காக புள்ளிகளை வைத்திருப்பின் அவை தானாகவே புதிய ஒழுங்கு முறைக்கு மாற்றப்படும்.’ பொது மன்னிப்பு கிடையாது’ என்று பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு நகல் சட்டமூலத்தைத் தயாரிக்க வேண்டிய உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சீர்திருத்தம் எப்போதோ வந்திருக்க வேண்டும். பரவாயில்லை இப்போது வந்திருக்கிறது என மோட்டார் போக்குவரத்து குழு இதனை வரவேற்றிருக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top