புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மது போதையை அளவிடும் கருவி எல்லா வகனங்களிலும் வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது. இப்புதியசட்டம் பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தாலும் உத்தியோகபூர்வ
ஆணை பெப்ரவரி 28ஆம் திகதி வெளியிடப்பட்டு நேற்று வியாழக்கிழமை பிரசுரிக்கப்பட்டுள்ளது. மொபட் தவிர்ந்த எல்லா தரையில் ஓடுகின்ற வாகனங்களிலும்; ஒவ்வொரு சாரதியும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தியோகபூர்வ வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டளை பிரான்ஸூக்கு  வெளியில் இருந்து வரும் வாகன்ங்களிற்கும் பொருந்தும் என்றும் போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  விடுமுறை காலமான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏராளமாக உல்லாச பயணிகள் பிரான்சிற்கு வருவார்கள். அதனால் பிரான்ஸ் நாட்டில் வாகன நெருக்கடி நிறைந்ததாக காணப்படும் . இந்த அளவ கருவியை கொண்டு போகாதவர்கள் ஒவ்வொருவருக்கும் 11ஈரோ அபராதம் விதிக்கப்படும். நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் அபராதம் விதிக்கும் படி பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சு வீதிகளில் இடம்பெறும் விபத்துக்ளை குறைக்கும் பிந்திய முயற்சியாகவே புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் சுமார் 4000 பேர் விதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். வீதி விபத்துக்களில் மூன்றில் ஒன்று குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதால் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top