புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஹூஸ்டன்::பிரசவத்துக்கு பிறகு கடும் மன அழுத்தத்துடன் காணப்பட்ட பெண் தனது ஒரு வயது குழந்தையை பாத்டப்பில் மூழ்கடித்து கொலை செய்தார். சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ காப்பகத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை சேர்ந்த
இந்தியர் ரசேஷ் படேல் (33). டாம்பா நகரில் உள்ள பிரபல நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு மேனேஜர். இவரது மனைவி நேஹா (30). மருந்தியலில் பட்டப்படிப்பு முடித்தவர் பார்மசிஸ்ட்டாக வேலை பார்த்து வந்தார். ஒரு ஆண்டு முன்பு இவருக்கு குழந்தை பிறந்தது. இஷான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பிரசவம் கஷ்டமாக அமைந்தது. தொடர்ந்து ஏற்பட்ட வலிகள், வயிறு உபாதைகள் போன்ற காரணங்களால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் நேஹா. மன அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளையும் சரியாக சாப்பிடுவதில்லை. குழந்தை இஷான்தான் இத்தனைக்கும் காரணம் என்ற வெறுப்பு அவர் மனதில் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி வீட்டில் அந்த பயங்கர சம்பவம் நடந்தது. ரசேஷ் ஆபீஸ் போன பிறகு, குழந்தை இஷானும் நேஹாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்த நேஹா, பளாரென்று அறைந்தார். குழந்தை மேலும் வீறிட்டு அழுதது. பாத்டப்பில் பாதி அளவுக்கு தண்ணீரை நிரப்பி, அதில் குழந்தையை நிற்க வைத்தார். தட்டுத் தடுமாறி அதிலேயே விழுந்து சாகட்டும் என்பது அவரது எண்ணம். கதவை சாத்திக்கொண்டு வெளியே வந்தவர் 10 நிமிடம் கழித்து உள்ளே சென்றார். பேச்சு மூச்சின்றி தண்ணீரில் கிடந்தான் இஷான். பார்மசிஸ்ட் என்பதால் முதலுதவி சிகிச்சைகள் நேஹாவுக்கு நன்கு தெரியும். ஆனாலும், குழந்தையை காப்பாற்றும் எண்ணம் இல்லாததால் முதலுதவி சிகிச்சையும் அளிக்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை 2 மணியளவில் பணி முடித்து வீடு திரும்பினார் ரசேஷ். போர்வையில் சுற்றிவைத்திருந்த குழந்தை உடலை அவரது கையில் திணித்தாள் நேஹா. ‘இஷான் இறந்துவிட்டான். நானும் சாகப் போகிறேன்’ என்று கூறிவிட்டு காரில் ஏறி பறந்தார். பல இடங்களில் சுற்றினார். டாம்பா விமான நிலையத்தின் பார்க்கிங் பகுதிக்குள் சென்றவர் 4வது தளத்துக்கு ஓட்டி சென்றார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள தயாரானார். அதற்குள், தகவல் கிடைத்து விரைந்த போலீசார் அவரை தடுத்து கைது செய்தனர். போல்க் கவுன்டி பகுதியில் உள்ள சிறையில் நேஹா அடைக்கப்பட்டார். சிறை வளாகத்தில் இருக்கும் மருத்துவ காப்பகத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top