புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகிலே மிக உயரமான கேக் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 8 மீற்றர் உயரத்தை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கேக்கனாது 2010 ஆம் ஆண்டு பாரிஸில் தயாரிக்கப்பட்ட 7.8 மீற்றர் உயர கேக்கின் சாதனையை முறியடித்துள்ளது.500 கிலோகிராம்
முட்டைகள், 260 கிலோகிராம் மாவு, 200 கிலோகிராம் கிரீம், 100 கிலோகிராம் சொக்லட் மற்றும் பழங்களை கொண்டு 24 மணித்தியாலத்திற்குள் இக்கேக் தயாரிக்கப்பட்டள்ளது.

சீனாவை சேர்ந்த 20 இற்கும் மேற்பட்ட அதிகரிகள் இணைந்து இந்த கேக்கை உருவாக்கியுள்ளனர்.நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இக்கேக்கினை பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ள நிலையில் பார்வையாளர்கள் உள்நுழைவதை தடுப்பதற்காக கேக்கினை சுற்றி உலோக தகடுகள் இடப்பட்டுள்ளன.


இதேவேளை, அதிகாரிகள் குழு இணைந்து இக்கேக்கின் அலங்கரிப்பு வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதனை உலகின் மிகப் பெரிய கேக்காக கின்னஸ் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top