துருக்கி நாட்டைச் சேர்ந்த சுல்தான் கோசென் (Sultam Kosan) கடந்த 2011ம் ஆண்டில் உலகின் உயரமான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 8அடி 3அங்குலம் உயரமாக இருந்த, கோசென் Acromegaly என்ற வளர்ச்சி நோயின் காரணமாக பிறந்தது முதல் இன்று வரை வளர்ந்து
கொண்டே இருந்துள்ளார்.
கொண்டே இருந்துள்ளார்.
இவரின் இந்த வளர்ச்சிக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்டுள்ள கட்டிதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சுவீடன் நாட்டில் தயாரான ஒரு மருத்துவக்கருவியை அறுவைச் சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் கோசெனின் கபாலத்திற்குள் செலுத்தி பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டியை அகற்றியுள்ளனர்.
எனவே இவர் இனி வளர வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் இந்த மருத்துவ சிகிச்சை பற்றிய விபரங்களை பொது மக்களுக்கு வெளியிட்டுள்ளது.கோசென் தற்போது வளரவில்லை என்பதை வெர்ஜினியா பல்கலைக்கழக அதிகாரிகளும் உறுதி செய்துள்ளதால் இந்த சிகிச்சை குறித்த விவரங்களும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது குறித்து வெர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மூளை அறுவை சிகிச்சை நிபுணரான ஜேசன் ஷீஹான் (Jason Sheehan) கூறுகையில், இந்தச் சிகிச்சை நல்ல பலன் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக