புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ரெட் புல் குளிர்பானம் கண்டுபிடித்த தாய்லாந்தின் கோடீஸ்வரர் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86.தாய்லாந்தின் பாங்காக் நகரை சேர்ந்தவர் சலியோ யூவித்யா. கடந்த 62ம் ஆண்டு பார்மாசூட்டிகல்ஸ் கம்பெனியை தொடங்கினார். இந்த கம்பெனி, சத்து பானங்கள்
தயாரிப்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அதன்பின், 'கிராதிங் டேங்' என்ற பெயரில் குளிர்பானம் வெளியிட்டார். இதுதான் கடந்த 70ம் ஆண்டில்  ரெட் புல் என்று பெயர் மாற்றப்பட்டு சர்வதேச சந்தையில் இடம்பிடித்தது. பெரும்பாலும் டிரக் டிரைவர்கள், தொழிலாளர்கள் மத்தியில் ரெட் புல் குளிர்பானம் வரவேற்பை பெற்றது. 

நீண்ட நேரம் வேலை செய்து சோர்ந்து போகும்போது அவர்களுக்கு இந்த பானம் சக்தி அளிப்பதாக கூறினர். 
தற்போது ரெட் புல் பானம் 160க்கும் அதிகமான நாடுகளில் விற்பனையாகிறது. இதன்மூலம் உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சலியோ இடம்பெற்றார். தாய்லாந்தின் 3வது பெரும் பணக்காரர் சலியோ. உலக பணக்காரர்கள் பட்டியலில் 205வது இடத்தை பிடித்துள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாங்காக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சலியோ நேற்று காலமானார். அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top