புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிறர் கண்களுக்கு அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? அப்படியென்றால் சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள் என்று ஆலேசானை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.சிவப்பு நிறம் வெப்பத்தின் அடையாளம். இந்த வண்ணம் எளிதில் பிறர்
கவனத்தைக் கவரும். இந்த நிற ஆடையை உடுத்தியுள்ளவர்கள் எளிதில் வெற்றியை அடைவார்கள் என்றும் ஆடை அலங்கார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பொதுவாக சிவப்பு நிற உடைகள் மற்றவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும். பகல் நேரத்தில் சிவப்பை அணிந்து சென்றால் உடல் சூட்டை அதிகரித்து வெப்பம் கொள்ள வைக்கும்.

ஆனால் சூரிய ஒளியால் அழகை அதிகப்படுத்தி காண்பிக்கும் என்பதும் உண்மை. அதனால் காட்டன் சிவப்புப் புடவைகளை பகலில் உடுத்திச் செல்வது நலம். இரவு நேரத்திற்கு மிக பொருந்தி வரும் நிறம் சிவப்பு. விழாக்கள், மேடைகள் முதலியவற்றில் பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டும்.

மணப்பெண்ணிற்கு திருமண வைபவத்தில் சிவப்பு நிற ஜரிகை வேலைப்பாடமைந்த புடவை பாந்தமாக இருக்கும். பெண்ணின் நகையின் அலங்காரத்திற்கு அவளை ஒரு தேவதையாக அனைவரின் கண்களுக்கும் காட்டும். திருமண வைபவத்திற்கு இது ஒரு பொருத்தமான வண்ணம். வாழ்த்த வருபவர்களுக்கு ஒரு நிறைவைத் தரக்கூடியது.

பெரும்பாலும் இளவயதுப் பெண்கள் சிவப்பு பட்டுப் புடவையையே விரும்புவது ஒரு கலை அம்சம் என்றே கூறலாம். ஒல்லியான பெண்கள் சிவப்பை உடுத்துவதைத் தவிர்த்தல் நலம். ஏனெனில் இது அதிக ஒல்லியாக காட்டும்.

கணவருடன் வெளியே செல்லும்போது சிவப்பை உடுத்திச் செல்லுங்கள். இது அவருக்கு உங்கள் மேல் பிரியம் அதிகம் வரச்செய்யும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top