புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சிரியாவில் மர்மமான முறையில் குழந்தைகள் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் 8000-ற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.இந்த நிலையில் ஐ.நா. சபையின் தூதரான கோபி அன்னன்
அரசுடனும், போராடும் மக்கள் பிரதிநிதிகளுடனும் சமரச பேச்சு நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே போராட்டம் கடுமையாக நடைபெற்று வரும் ஹோம்ஸ் நகரில் ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள 47 பேர் மர்ம முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.இவர்களை தீவிரவாதிகள் கொன்றதாக சிரியா தகவல் தொடர்பு மந்திரி தெரிவித்துள்ளார். ஆனால் ராணுவத்தினர் தான் கொலை செய்துள்ளனர் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களின் காட்சிகளை போஸ்டராக அச்சடித்து ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். மேலும் இணைய தளங்களிலும் ஒளிபரப்பி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top