புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மன்னார் - பெரியகாமம் பிரதேச வீடொன்றின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற
சிறுவன் அங்கிருந்து 177,450 ரூபா பெறுமதியான மடிக்கணினி மற்றும் 3 கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளார். 

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் களவாடப்பட்ட மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சிறுவன் குறித்து மன்னார் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top