சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர்சனசமுக நிலையம் புதுப்பொலிவுடன் எதிர்வரும் 15/04/2012 அன்று திறப்பு விழா காண உள்ளது. அன்றைய தினம் எமது ஊர் உறவுகளால் புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் ஒருசில நாட்டு ஒன்றியங்களும் ஒன்றியங்களில் சேவை ஆற்றிவரும் ஒரு சிலரும் இணைந்து எமது சமுக
மாணவர்களுக்கும் வருமைப்பட்டவர்களிற்கும் சில பல உதவிகள் செய்வதற்கு முன் வந்துள்ளனர்.
உதாரணமாக பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை பை பெற்றுக்கொடுத்தல்,பாடசாலைக்கு தேவையான பாடாசலை பொருட்கள் (கொப்பிகள்,பயிற்ச்சிப்புத்தகங்கள்,பென்சில்கள்)என்பனவும் அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை தைத்துக்கொடுத்தால் வறுமையில் வாழும் தொழில் செய்யமுடியாதாவர்களுக்கு சிறிய தொகை பணம் அன்பளிப்பாக வழங்குதல் போன்றவற்றை வழங்க முன் வந்துள்ளனர். சனசமுக நிலைய திறப்புவிழா அன்று இன்னும் பல பயனுள்ள செயற்திட்டங்கள் எம் உறவுகளுக்கு ஆற்றுவதற்காக ஏற்பாடுகள் எம்மிடம் உள்ளன.அவற்றினை தனி நபராகவோ அல்லது ஒரு சிலருடன் இணைந்தோ மற்றும் குழுக்கள்,ஒன்றியங்கள்,அமைப்புக்கள் மூலமோ செய்வதற்கு விரும்புபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளலாம். தொடர்புகளுக்கு -Shanthai@hotmail.com Skype-Shanthai.com நன்றி
0 கருத்து:
கருத்துரையிடுக