புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணத்தில் விதி திரைப்பட பாணியில் போராடுகின்றார் மட்டுவிலைச் சேர்ந்த 25 வயது யுவதி. இந்த யுவதி அனு என்கிற பெயரால் அறியப்படுகின்றார். இவருக்கு வயது 25. சென்னையில் உயர் கல்வி பயின்றவர்.மட்டுவில் – நுணாவில் வைரவர் கோவிலடியைச் சேர்ந்தவர்
இந்திரபவன் சியந்தன். இவருக்கும் வயது 25. இவரும் சென்னை வந்து அனு பயின்ற கல்லூரியிலேயே படித்து இருக்கின்றார். 

இருவருக்கும் இடையிலான பழக்கம், நெருக்கம் ஆகியன காதலாக வளர்ந்தன. கணவன் – மனைவியாக 2009 ஆம் ஆண்டு முதல் சென்னையில் ஒரே வீட்டில் வாழ்ந்து இருக்கின்றனர். 2010 ஆம் ஆண்டு பகிரங்கமாக பரஸ்பரம் மோதிரம் மாற்றி இருக்கின்றார்கள்.

அனுவிடம் இருந்து மூன்று இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம், தங்க நகைகள், கார் ஆகியன உட்பட பெறுமதி மிக்க ஏராளமான பொருட்களை சீதனம் என்கிற பெயரில் கறந்து வந்து இருக்கின்றார் சியந்தன்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் நாட்டுக்கு திரும்பி வந்த சியந்தனுக்கு ஊரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடனான நாட்டம் தொடர்ந்து இருக்கின்றது. அனுவுடன் ஆன தொடர்பை மெல்ல மெல்ல விலத்தி இருக்கின்றார். தகவல் அறிந்த அனு இந்தியாவில் இருந்து திரும்பி வந்து சியந்தனின் வீட்டுக்குகூட சென்று நீதி கோரி இருக்கின்றார்.

சியந்தனோ, சியந்தனின் குடும்பத்தினரோ இவர் மீது இரக்கம் காட்டவில்லை. இவரை மனைவியாக ஏற்க மாட்டார் என்று சியந்தன் சொல்லி விட்டார். சியந்தனால் இவருக்கு பல தடவைகள் படுகொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு இருக்கின்றன. அத்துடன் சியந்தன் இவரை படுகொலை செய்கின்றமைக்கு குறைந்தது இரு தடவைகள் முயற்சித்தமையுடன் தாக்கியும் உள்ளார். சியந்தனின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சியந்தனின் நண்பர்கள் இவருடன் தொலைபேசியில் படு ஆபாசமாக பேசி இருக்கின்றனர்.

சியந்தனுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொண்டார் அனு. இந்நிலையில் அனுவை சிறிது காலத்தின் பின் திருமணம் செய்து கொள்வார் என்று பொலிஸில் உத்தரவாதம் வழங்கி இருக்கின்றார் சியந்தன். ஒற்றுமையாக இருக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர் பொலிஸார்.

ஆனால் கடந்த பெப்ரவரி மாத நடுப் பகுதியில் மற்றப் பெண்ணுடன் ஓட்டம் பிடித்து விட்டார் சியந்தன்.

சியந்தனுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. 

பாதிக்கப்பட்ட அனுவின் சார்பில் தாபரிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சியந்தனுடனும், சியந்தனின் வீட்டாருடனும் கையடக்கத் தொலைபேசியில் நீதி கோரி பேசிய விடயங்களை அனு பதிவு செய்து வைத்து உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top