செர்பிய நாட்டின் நோவிசேட் நகரில், இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் பலியாயினர். செர்பியாவின் நோவிசேட் நகரில் நேற்று, இரவு விடுதியில், 350 பேர் தங்கியிருந்தனர். அப்போது ஏற்பட்ட மின்கோளாறால் இரவு விடுதியின் அரங்கம் தீப்பற்றி எரிந்தது.
பெரும்பாலானோர் தப்பி சென்று விட்டனர். மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் தீயினால் எழுந்த புகையில் மூச்சு திணறி பலியாயினர்; சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இரவு விடுதியின் உரிமையாளர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக