புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த இளம்பெண், நிச்சயிக்கப்பட்ட வாலிபரின் தந்தை மீது ஆசிட் வீசினார். இந்த வழக்கில் பெண்ணுக்கு பாகிஸ்தான் கோர்ட் 34 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத்தில் வசிப்பவர் அக்தர் ரசாக். இவருடைய மகன் முகமது ஷெசாத்துக்கும், ருக்சானா என்ற பெண்ணுக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திடீரென திருமணத்தை அக்தர் நிறுத்திவிட்டார். அதற்கான காரணம் எதுவும் சொல்லவில்லை. அத்துடன் முகமதுவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன.

இதில் ஆத்திரம் அடைந்த ருக்சானா கடந்த 2010 நவம்பர் 20ம் தேதி அகமது வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய போது, மறைத்து கொண்டு வந்திருந்த ஆசிட்டை எடுத்து முகமது மீது வீசினார் ருக்சானா. அதை தடுக்க அக்தர் குறுக்கே பாய்ந்தார். அதில் அவருடைய ஒரு கண் மற்றும் உடல் முழுவதும் வெந்து போனது. இதுதொடர்பாக ருக்சானாவை போலீசார் செய்தனர். இந்த வழக்கு பைசலாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட், ருக்சானாவுக்கு 34 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கு, தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top