புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரான்ஸின் வடமேற்கு நகர அணு உலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பக்குதி மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. நோர்மண்டியின் பென்லி நகரில் உள்ள குறித்த அணு மின் உலையின் இரு இடங்களில் திடீரென தீ விபத்து
ஏற்பட்டது. இதையடுத்து அணு உலையை குளிர்விக்கும்...
திரவம் வெளியேறியதாகவும், இதனால் அயல் பிரதேசங்களுக்கு கதிர்வீச்சு தாக்கம் பரவக்கூடும் எனவும் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனினும் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக கூறியுள்ள அணு மின் உலை பாதுகாப்பு அதிகாரிகள், அணு உலையில் இருந்து எவ்வித கதிர்வீச்சும் வெளியேறவில்லை எனவும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அணு உலையின் குளிர்விக்கும் பகுதிக்கு கொண்டுசெல்லப்படும் எண்ணெய் கசிந்தமையினாலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளனது. இதையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட இரு அணு உலைகளும் தன்னிச்சையாக தமது இயக்கங்களை நிறுத்திக்கொண்டுள்ளன.

எனினும் இவ்விபத்தினால் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்ட பதற்றம் இன்னமும் தணியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸின் 58% வீதமான மின் தேவை அணு உலைகள் மூலமே பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top