புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தென் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மாலாவியின் ஜனாதிபதி பிங்கு வா முதரிகா (Bingu wa Mutharika) மாரடைப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார்.
78 வயதான முதரிகாவுக்கு கடந்த வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டதுடன், தெ.ஆபிரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எனினும் நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு பிங்கு வா முதரிக்காவே காரணம் என விமர்சனம் எழுந்திருந்ததால் அவருடைய மரணம் அந்நாட்டு மக்களிடையே அதிர்வலைகள் எதனையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தபட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top