சீனாவில், அரிய சிற்பங்களை பாதுகாக்கும் பணியில் நாய்களை ஈடுபடுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அன்யு மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த, ஒரு லட்சத்துக்கும் அதிகமான அழகிய கல் சிற்பங்கள் உள்ளன. எட்டு இடங்களில் உள்ள இந்த சிற்பங்களை சீன பழம் பொருள் பாதுகாப்பு துறை பராமரித்து வருகிறது. இதற்காக கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் போன்ற கருவிகள் இந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகளால் சில சமயங்களில் இடையூறு ஏற்படுவதால், 66 நாய்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக