கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை அருகே செங்குன்றம் பிடபிள்யூடி தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (24). வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில்
பணியாற்றுகிறார்.
பணியாற்றுகிறார்.
இந்த கம்பெனியில் வேலை செய்த திருவண்ணாமலை மாவட்டம் வட பொழுதூர் நாயுடு மங்களத்தை சேர்ந்த ராஜகுமாரி (26) என்பவரை 2 வருடமாக காதலித்தார். 8 மாதத்துக்கு முன்பு இருவரும் பதிவு திருமணம் செய்தனர். இதன்பிறகு, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது இதையடுத்து, செங்குன்றம் அடுத்த தீர்த்தகரியம் பட்டு கிராமத்தில் தனியாக வீடு எடுத்து ராஜகுமாரி வசித்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று மதியம் பிரேம்குமார் அங்கு சென்றார். சமையல் செய்துகொண்டு இருந்த ராஜகுமாரிடம், என்னை விவாகரத்து செய்ய முயற்சி செய்கிறாயா என்று கேட்டு தகராறு செய்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ராஜகுமாரி, அடுப்பில் கொதித்துக்கொண்டு இருந்த எண்ணெயை எடுத்து பிரேம்குமார் மீது வீசினார். அவரது முகம், நெஞ்சு பகுதியில் வெந்தது. வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் கூடினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த பிரேம்குமாரை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ராஜகுமாரி அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். இது குறித்து, செங்குன்றம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜகுமாரியை கைது செய்தனர். அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக