மெக்சிகோவில் இன்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் மெக்சிகோ சிட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூமி அதிர்ந்தது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பீதி அடங்கியதும் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதற்கிடையே, 6.3 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. ஒசாகா பகுதியில் உள்ள அகாபுல்கோ என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 12 மைல் அழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நில நடுக்கம் காரணமாக எந்தவித சேத மதிப்பும் ஏற்படவில்லை என மெக்சிகோசிட்டி நகர மேயர் அறிவித்துள்ளார். முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் நகரை அவர் சுற்றிப்பார்த்தார். கடந்த 2 வாரத்துக்கு முன்பு மெக்சிகோவில் குயரோ, ஒசாகா மாகாணங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதில் 2 பேர் பலியாகினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக