பழம்பெரும் நகைச்சுவை நடிகரான கே.ஏ. தங்கவேலுவின் மனைவியும், காமெடி நடிகையுமான எம். சரோஜா இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 1950 முதல் 1970 வரை திரையுலகில் கோலோச்சிய காமெடி நடிகர் 'டணால்' தங்கவேலு என்கிற கே.ஏ.தங்கவேலு ஆவார்.
இவரும் எம்.சரோஜாவும் இணைந்து நடித்து 1959-ல் வெளிவந்த கல்யாணப்பரிசு படம் இவர்களுக்கு ஏகோபித்த வரவேற்பை பெற்றுத் தந்தது. இப்படத்தில் இடம்பெற்ற காமெடி எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தியது என்றால் அது மிகையில்லை.
சினிமாவில் மட்டுமின்றி இல்வாழ்க்கையிலும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். கடந்த செப்டம்பர் 28, 1994- ல் தங்கவேலு மரணமடைந்தார். இதனால் தனது பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வந்த சரோஜா, இன்று மாரடைப்பால் காலமானார்.அவரின் இழப்பு தமிழ் திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியா இழப்பாகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக