ஐபிஎல் 5வது சீசன் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது. மொத்தம் 56 நாட்களில் 76 ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை
எதிர்த்து ஆடுகிறது. இதனால் சென்னை களை கட்டியுள்ளது. பிசிசிஐ சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் 20,20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் 3 சீசனில் 8 அணிகள் கலந்து கொண்டன. கடந்த முறை 10 அணிகள் பங்கேற்றன. கொச்சி அணியின் பண பரிவர்த்தனையில் பிரச்னை ஏற்பட்டதால் அந்த அணி அதிரடியாக நீக்கப்பட்டது. அதனால் இந்த முறை 9 அணிகள் கலந்து கொள்கின்றன. சென்னை, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி, ஐதராபாத், புனே, பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகள் பட்டம் வெல்ல பலப்பரிட்சை நடத்துகின்றன. முதல் சீசனில் ராஜஸ்தான் அணி பட்டம் வென்றது. அடுத்த சீசனில் ஐதராபாத் மகுடம் சூடியது. கடைசியாக நடந்த 2 சீசனிலும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டம் வென்றது. இந்த முறை 5வது சீசனை எப்போதும் இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக நடத்த ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சென்னை நந்தனம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 மணி நேரம் நடைபெறும் விழாவில், அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சல்மான்கான், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் ஆகியோருடன் பிரபு தேவாவின் கலக்கல் நடனமும் இடம்பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார். துவக்க விழா முடிந்ததும் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 56 நாட்களில் 76 ஆட்டங்கள் நடக்கின்றன. மே 27ம் தேதி இறுதி போட்டி நடக்கிறது. தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். இந்த முறை 9 அணிகள் மட்டுமே கலந்து கொள்வதால், லீக் சுற்றில் ஒரு சில அணிகள் அதிக ஆட்டங்களிலும் ஒரு சில அணிகள் குறைந்த ஆட்டங்களிலும் மோத உள்ளன. சென்னை அணி 16 லீக் ஆட்டத்தில் மோதுகிறது. நடப்பு சாம்பியனான இந்த அணி, தனது முதல் ஆட்டத்தில் கடந்த ஆண்டு 2வது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று இரவு வரை நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். இன்று காலையும் அவர்களது வலை பயிற்சி நடந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக