புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பஸ்சை ஓரமாக நிறுத்தி பயணிகளைக் காப்பாற்றிய அவர் பலியானார். ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சிவகாசிக்கு நேற்று காலை 10 மணியளவில் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் புறப்பட்டது.பஸ்சை
சத்தியமங்கலத்தை சேர்ந்த நவாப் ஜான்(50) ஓட்டினார். 11 மணியளவில் கரூர் நெடுஞ்சாலையில் உள்ள கணபதிபாளையம் என்ற இடத்தில் வந்தபோது, டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி அதிகமானதைத் தொடர்ந்து, நிலை தடுமாறிய டிரைவர், பஸ்சை சாலையோரம் பாதுகாப்பாக  நிறுத்தினார்.

பின்னர், நெஞ்சை பிடித்துக் கொண்டே பஸ்சை விட்டு கீழே இறங்கிய அவர், திடீரென சாலையில் சுருண்டு விழுந்தார். பயணிகள் பதறியடித்து இறங்கி பார்த்தபோது, அவர் மாரடைப்பால் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது பணி முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த கொடுமுடியை சேர்ந்த மற்றொரு டிரைவர், பயணிகளை இறக்கிவிட்டு, நவாப் ஜானை அதே பஸ்சில் அமர்த்தி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவாப் ஜான் சிறிது நேரத்தில் இறந்தார்.

பஸ் பயணிகள் கூறும்போது, ‘மாரடைப்பு ஏற்பட்டபோது, தொடர்ந்து அவர் பஸ்சை இயக்கியிருந்தால் அனைத்து பயணிகளுக்கும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். எங்கள் அனைவரையும் காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த அரசு பஸ் டிரைவரின் தியாகம் மிகப்பெரியது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top