ஆஸ்திரேலியாவில் உள்ள நகரத்தில் ஒரு பெண் தனது 2 வயது குழந்தையுடன் ஒரு வீட்டில் தனியாக தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களது வீடு பூட்டியே இருந்தது.இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார்
விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு 33 வயது மதிக்க தக்க பெண் இறந்து கிடந்தார். அருகே அவரது 2 வயது குழந்தை மயங்கி கிடந்தது. உடனே அந்த குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அந்த பெண் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பூட்டிய வீட்டுக்குள் மரணம் அடைந்து விட்டார். அதை அறியாத குழந்தை தாயின் பிணத்துடன் தங்கியிருந்துள்ளது. வயிறு பசிக்கும் போது வீட்டில் இந்த ஈஸ்டர் முட்டை சாக்லேட்டை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தது தெரிய வந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக