புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தென்மராட்சி பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கிணறொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் சாவகச்சேரி காவற்றுறையினரால் மீட்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி வடக்கு சோலையம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள வயல்
வெளியில் பயன்படுத்தாத கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசப்பட்டதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் கிணற்றை பார்த்த சமயம் கிணற்றில் சடலம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சாவகச்சேரி காவற்றுறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த சடலம் நேற்றிரவு வரை மீட்கப்படாததால் சடலத்தை அடையாளம் காணமுடியவில்லை எனக் கூறப்படுகிறது.

குறித்த பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் ஆனந்தன் (வயது 51) என்ற குடும்பஸ்தர் ஒருவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணமால் போயியுள்ளதாகவும் அவருடைய சடலமாக இருக்கலாம் என அப்பகுதி மக்களால் சந்தேகிக்கப்படுகிறது.

சடலத்தை மீட்ட காவற்றுறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top