பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் 3ஆவது முறையும் பெண் குழந்தையை பெற்ற தன் மனைவியை அவரது கணவரே கொலை செய்த கொடூர சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமிர்தசரசில் வசித்தவர் பரம்ஜித் கவுர் (35), இவருக்கு முதல் இரண்டு பெண்
குழந்தைகள் பிறந்தது. இதனால் அவரது கணவர் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மீண்டும் கருவுற்ற பரம்ஜித் மூன்றாவது முறையும் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தைகள் பிறந்தது. இதனால் அவரது கணவர் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மீண்டும் கருவுற்ற பரம்ஜித் மூன்றாவது முறையும் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆண் குழந்தை பெற்றெடுக்காதால் ஒரு குற்றமும் செய்யாத பரம்ஜித் கவுரவை அவரது கணவர் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக பரம்ஜித் கவுரின் கணவர் வீட்டார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.பஞ்சாப்பில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் இளம்பெண்களையும்,பெண் குழந்தைகளையும் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்த காலத்திலும் இப்படி ஒரு சம்பவம் நிகழவது இந்தியாவிற்கே அவமானமாக கருதப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக