புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சுவிட்சர்லாந்தில் ஆபாசப் புத்தகங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்களும், குழந்தை மோகம் பற்றிய விடயங்களுமே 90 சதவீதம் இடம் பெற்றுள்ளதாக சைபர்கிரைம் கட்டுப்பாட்டுத் துறையின் ஒருங்கிணைப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த 2010ம் ஆண்டில் இந்த ஆபாச இலக்கியம் பற்றிய 1206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக மத்திய காவல்துறை (Fedpol) கூறுகிறது. இந்தத் துறையினரால் இப்போது குற்றங்கள் குறைந்து விட்டதாகக் கூற இயலாது.

ஆபாச இலக்கியம் என்பது விலங்கு மோகம், குழந்தை மோகம் மற்றும் வன் புணர்ச்சி போன்றவற்றைப் பற்றியதாகும் என்று அதிகாரிகள் விளக்குகின்றனர். குழந்தை மோகம் (Paedo phile) பற்றிய படங்களும், நிகழ்வுகளும் இணையதளம் மற்றும் அச்சு ஊடகம் மூலமாகப் பரப்புகின்றனர் மற்றும் பரிமாறிக்கொள்கின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டில் 225 வழக்குகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் அடையாளம் காணப்பட்டு 223 பேர் அந்தந்த மாநிலக் காவல்பிரிவினரால் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்குகளில் இரண்டு மட்டும் அந்நியநாட்டு சட்ட எல்லைக்கு உட்பட்டவையாக இருந்ததால் அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

குழந்தை ஆபாசப்படங்களையும், தகவல்களையும் இணையதளங்களில் பகிர்ந்து கொண்ட 214 பேரைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 16 வழக்குகளில் காவல்துறையினரும் குற்றவாளிகளைப் போலவே பேசி (Chat) நடித்து அவர்களைப் கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top