அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் இலங்கைக் குடும்பம் ஒன்று தனது குடும்பத்தலைவனை பரிதாபமாக இழந்துள்ளது .தனது தந்தையை கொள்ளத்திட்டமிட்ட இலங்கைப்பெண் ,சுமார் 3 மாதமாக அதற்கு பயிற்சியும் எடுத்துள்ளார் என்ற செய்திகளும் தற்போது கசிந்துள்ளது .கடந்த 2 வருடங்களுக்கு முன்னர்...இக்கொலை தொடர்பான முழுவிபரங்களையும் அவுஸ்திரேலிய காவல்துறையினர் தற்போதுதான் வெளியிட்டுள்ளனர். இரத்தத்தை உறையவைக்கும் இக்கொலை சிலவேளைகளில் இளகிய மனம்கொண்டவர்களை பாதிக்கும் எனவே அப்படியானவர்கள் தயவுசெய்து இதனை படிக்கவேண்டாம். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய மனைவி கார்மென் (கொல்லப்பட்ட நபரின் மனைவி )இக்கு அவர் வீட்டுத் தொலைபேசியில் ஒரு வாய்ஸ் மெயில் (voice mail) காத்திருந்தது .
அதனை அவர் கேட்டபோது ஆச்சரியம் அடைந்தார் . காரணம் சுமார் 3 வருடங்களாக எங்கே இருக்கிறார் என்று கூடத்தெரியாத அவர்கள் மகள் தொலைபேசியில் ஒரு வாய்ஸ் மெயிலை விட்டிருந்தார் . அதில் தான் நலமாக உள்ளதாகவும் அப்பாவின் உதவி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனது கம்பியூட்டரில் (computer) ஒரு புரோக்கிராமை இன்ஸ்டால் (software install) செய்யவேண்டும் அதற்க்கு அப்பாவின் துணை அவசியம் என்றும் கூறப்பட்டதோடு, மிகவும் அவசரம் என்றும் சொல்லப்பட்டிருந்தது .
நீண்டக்கலாமாக மகள் ஷார்மின் அப்பாவுடன் பேசுவது இல்லை. அதுவும் ஷார்மின் மனநிலை பதிக்கப்பட்டு அதற்காக மருத்துவ சிகிற்சையை எடுத்துக்கொண்டு இருந்தவேளையே தாய் தந்தையோடு தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டார். கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை, மனைவி கார்மென் தனது கணவருக்கு தெரிவித்தார். கணவர் லலின் அவர்கள் இச்செய்தி தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அது வெகுநாட்கள் நீடிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, திரு.லலின் அவர்கள் தனது மகளைப் பார்க்க அடுத்த நாளே கிளம்பிச்சென்றார்.
மகள் ஷார்மின் வீட்டிற்கு சென்ற தந்தையை ஷார்மின் உபசரித்தார். குடிப்பதற்கு காப்பியும் கொடுத்தார். தனது கம்பியூட்டரை பார்வையிடுமாறு கூறிவிட்டு தான் குளியல் அறைக்குச் செல்வதாகக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். தந்தை கம்பியூட்டர் முன்னால் அமர்ந்து தனது மகள் கொடுத்த CD யைப் போட்டு ஒரு புரோக்கிராமை இன்ஸ்டோல் பண்ண ஆரம்பித்தார்.
நேராகப் படுக்கை அறைக்குச் சென்ற மகள் ஷார்மின் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து தந்தைக்குப் பின்புறமாக நின்று அவர் தலையை நோக்கி சுட்டுள்ளார். என்ன ஆச்சர்யம்! துப்பாக்கி வேலைசெய்யவில்லை! துப்பாக்கியை சுடும்போது ஏற்படும் கிளிக் சத்தம் கூட தந்தையின் காதுகளுக்கு கேட்கவில்லை. கேட்டிருந்தால் அவர் நிச்சயம் திருப்பிப் பார்த்திருப்பார். அப்பா தொடர்ந்தும் கம்பியூட்டரில் இருப்பதையும், அவர் திரும்ம்பிப் பார்க்கவில்லை என்பதனை சாதகமாக பயன்படுத்திய மகள் மீண்டும் படுக்கை அறைக்குச் சென்று துப்பாக்கியை சரி செய்ய முனைதுள்ளார்.
இவருக்கு எப்படி துப்பாக்கியை சரிசெய்யத் தெரியும் என நீங்கள் எண்ணலாம். இதற்குத் தான் அவர் துப்பாக்கி சுடுவது எப்படி என உள்ளூரில் (லோக்கலில்) உள்ள 3 துப்பாகி சுடும் கிளப்புக்குச் சென்று சுமார் 3 மாதம் பயிற்சி எடுத்துள்ளாராம். இவர் மனநிலை பாதிக்கப்படவர் என்று தெரியாமலே துப்பாக்கி சுடும் கிளப்பில் இவருக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என்றால் பாருங்களேன். அப்போது துப்பாக்கி சுடாமல் மக்கர் பண்ணினால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது.
அதனைப் பாவித்து துப்பாக்கியை சரிசெய்துகொண்டு மீண்டும் வந்து தகப்பனை பின்னால் இருந்து தலையில் சரமாரியாகச் சுட்டுள்ளார். பல தடவைகள் சுடப்பட்ட நிலையில் தகப்பனார் இறந்து நிலத்தில் வீழ்ந்தார். சற்றுநேரம் கழித்து பொலிசாருக்கு தானே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தான் தனது தந்தையை சுட்ட விடையத்தைக் கூறியுள்ளார் ஷார்மின். இவர் கைகளுக்கு துப்பாக்கி எப்படிக் கிடைத்தது? துப்பாக்கி சுடும் கிளப்பில், இருந்து இத் துப்பாக்கியை இவர் எவ்வாறு வீட்டிற்கு கொண்டு சென்றார் என்பது எல்லாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவை அனைத்தும் தற்போது நடந்து முடிந்த விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது. தனது அப்பா மீது அதீத வெறுப்பு கொண்டவராக ஷார்மின் இருந்தார் என்றும், அவர் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்தார் என்றும் மனோதத்துவ டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். TV யில் வரும் ஒரு தொடர் நாடகத்தில் வரும் நிகழ்வுகள் இவரைப் பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மனநிலை பாதிக்கப்பட்ட போதிலும் அவர் சில நாடகங்களை தொடர்ந்து பார்த்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. இன்றும் பல தமிழ்ப் பெண்கள் கணவன் வேலைக்குச் சென்றதும், TV இல் நாடகங்களைப் பார்ப்பதையே முழுமுதல் தொழிலாகக் கொண்டுள்ளனர். இந் நாடகங்களும், அன்றாடம் இதில் வரும் சில காட்சிகளையும் அடிக்கடி பார்ப்பதால் அவை எவ்வகையான தாக்கங்களை மனதில் ஏற்படுத்துகின்றன என்பதனை நாம் ஷர்மின் ஊடாகப் பார்த்துள்ளோம் என நான் எண்ணுகிறேன்.
0 கருத்து:
கருத்துரையிடுக