புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வேலை தேடி தாய் வெளிநாட்டுக்குச் சென்றதால் தந்தை வழிதவறி முறைக்கேடாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்ற நிலையில் கொஸ்வத்தை பகுதியில் மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. கொஸ்வத்தை - மெல்வத்தை பகுதியில் தந்தை தனது 12 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த சிறுமியின் தாய் அச்சிறுமியின் எதிர்காலம் கருதி பணம் உழைக்கவென 2009-11-19 அன்று வெளிநாடு சென்றுவிட்டார்.அவருடைய 12 வயது மகள் 32 வயதுடைய தந்தையின் பார்வையில் வளர்ந்து வந்துள்ளார். 

எனினும் வேலியே பயிரை மேய்ந்தது போல தந்தை தனது மகளான 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.இது குறித்து கொஸ்வத்தை பொலிஸ் நிலையத்தில் நேற்று 23ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் சந்தேகநபரான தந்தையை கைது செய்துள்ளனர். 

சந்தேகநபரிடம் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top