பாகிஸ்தானில் நேற்று விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலிருந்து போயிங் 734 விமானம் 127 பேருடன் சென்ற போது மோசமான வானிலை
காரணமாக...ஹூசைன் அபாத் அருகே விழுந்து விபத்திற்குள்ளானது, இதில் பயணித்த 127 பேர் பலியாயினர். இந்நிலையில் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மீட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. பெட்டியிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் விபத்திற்கான காரணம் தெரிய வரும்.
0 கருத்து:
கருத்துரையிடுக