புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ள பருவ வயதினருடன் பேசி அவைகளை முற்றிலுமாக குணப்படுத்தக் கூடிய கணினி விளையாட்டு ஒன்று ஆராய்ச்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உளச் சோர்வினால் பாதிப்படைந்துள்ளவர்களுக்கான இந்த பிரத்யேக
விளையாட்டினை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானிய மருத்துவ இதழில் இந்த ஆராய்ச்சி வெளியாகியுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்காக 12 முதல் 19 வயதுள்ள மனச் சோர்வினால் பாதிக்கப்பட்ட 187 பருவ வயதினர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்பார்க்ஸ் எனப்படும் புதிய முப்பரிமாண விளையாட்டை பாதி வரையிலும் விளையாடச் செய்ததிலேயே இவர்களின் உளச்சோர்வு நிலை முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டுள்ளது.

உணர்ச்சிகள்
புதிய நம்பிக்கை உண்டாகுதல்
உதவாத எண்ணங்களை அறிந்து கொள்ளுதல்
உள்ளிட்ட பல தலைப்புக்களில் ஏழு வாரங்களுக்கு ஸ்பார்க்ஸ் முப்பரிமாண விளையாட்டு இவர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடமிருந்த எதிர்மறை சிந்தனைகளை விட்டொழித்து   விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர் என்பது நிருபணமாகியுள்ளது. ஒப்பிட்டுப் பார்த்ததில் வழமையான பிற சிகிச்சை முறைகளைக் காட்டிலும் ஸ்பார்க்ஸ் முப்பரிமாண விளையாட்டு முறை சிறந்தது என்பதும் தெரிய வந்துள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top