புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கனடா குடியுரிமை பெற்ற 67வயதுடைய சண்முகம் கிருஷ்ணமூர்த்தி ( யாழ்ப்பாண வதிவிட முகவரி 4/11 ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம்) என்பவர் 16வயது ஏழைச்சிறுமி மீது பலமுறை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார் என வைத்திய பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஹொட்டல் ஒன்றில் வைத்து பாலியல் உறவு கொண்ட குற்றத்திற்காக வவுனியா காவல்துறையினர் அவரை கடந்த வாரம் கைது செய்து வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராசா முன்னிலையில் ஆஜர் செய்த போது அவரை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

அச்சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.

கனடா பிரஜா உரிமை பெற்ற 67வயதுடைய சண்முகம் கிருஷ்ணமூர்த்தி அச்சிறுமியை பராமரித்து வந்த உறவினர்களுக்கு பணத்தை கொடுத்து சிறுமியை வாங்கி பாலியல் பலாத்காரம் புரிந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சிறுமியின் பெற்றோர் வன்னி யுத்தத்தில் இறந்த பின்னர் உறவினரின் வீட்டில் வசித்து வந்த போது அச்சிறுமிக்கு உதவி செய்வதாக நடித்து பணத்தை கொடுத்து இத்துஷ்பிரயோகத்தை அவர் செய்துள்ளார் என விசாரணை நடத்திய வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த வவுனியா ஹொட்டலின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top