புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெண் குழந்தை பெற்றதால் மனைவிக்கு விஷம் கொடுத்ததாக மத்திய தில்லியின் லஹோரி கேட் பகுதியில் ஜாவீத் தரீக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இஷாக் பர்வீன் என்ற அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து போலீசார், ‘’மத்திய
தில்லியின் லஹோரி கேட் பகுதியில் ஜாவீத் தரீக், இஷாக் பர்வீன் தம்பதி வசித்து வந்தனர்.

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பர்வீனை வியாழக்கிழமை இரவு, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் ஜாவீத் தரீக் சேர்த்தார். உயிருக்குப் போராடிய நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்ற ஜாவீத், அதன் பிறகு திரும்பி வரவில்லை.

இதற்கிடையே, பர்வீனின் தந்தை மல்லிக் சிக்கந்தர், மகளைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார். தனது மகளின் நிலைக்கு அவரது கணவரே காரணம் என்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் மல்லிக் புகார் அளித்தார்.

“கடந்த மாதம் தான் பர்வீனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று கூறி தினமும் பர்வீனை ஜாவீத் தரீக் அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மல்லிக் சிக்கந்தர் புகாரில் குறிப்பிட்டார். அதையடுத்து, ஜாவீத் தரீக்கைத் தேடி வருகிறோம்’’ என்று போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top