பொன், பொருளைவிட பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது மதிப்பும், மரியாதையையும் தான். மனைவி என்பவள் அடிமையல்ல என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.பெண்கள் தங்களுக்கு சேவை செய்ய மட்டுமே படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணத்தை
ஆண்களின் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். அத்தகைய ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.
ஆண்களின் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். அத்தகைய ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.
சாமர்த்தியசாலியா நீங்கள்
அதிகம் சம்பாதிப்பது என்பது ஒருபக்கம் இருந்தாலும் சாமர்தியசாலியாய் நடந்து கொள்பவர்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர். பெண்ணின் உடலைமைப்பினை பற்றி குறை கூறுவதை விடுத்து, உள்ளதை உள்ளபடியே நேசிக்கும் ஆண்களைத் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெருந்தன்மை தேவை:
ஆண்களைப் போல பெண்களுக்கும் உடலாலும், மனதாலும் சமபலம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு பெண்களை, பெண்களாய் நடத்தும் பெருந்தன்மை கொண்ட ஆண்களையே பெண்கள் நேசிக்கின்றனர். உரிமையை பறிக்காமல், சுதந்திர உணர்வோடு நடத்த வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு.
கை நீட்டும் ஆண்கள்:
கணவராக வருபவர் தங்களின் உணர்வுகளை மதித்து அக்கறையோடு நடத்தவேண்டும் என பல பெண்கள் விரும்புகின்றனர். பெண் மீது நம்பகத்தன்மை கொண்டவராக ஆண் இருக்க வேண்டும். அவள் தன் விருப்பத்திற்கு இணங்கவே பிறந்தவள் என்பதுபோல் நினைத்துக் கொண்டு, உடல் ரீதியான இன்பத்திற்காக நினைத்த நேரத்திற்கு வற்புறுத்தி அழைக்கக்கூடாது.
தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண் வர்க்கத்தினரை பெண்கள் அறவே வெறுக்கிறார்கள். அத்துடன் தேவைக்காக நெருங்கி வந்து, வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு செய்வது, மது அருந்துவது என்று இருக்கும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள்.
மனதை ஆளும் ராஜா:
குடும்ப வாழ்க்கையைப் பற்றி தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் குறித்த உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் உள்ள புத்திசாலி ஆண்களை பெண்கள் மனதில் வைத்து கொண்டாடுவார்கள். அவர்கள் மீது அளவில்லா நேசம் காட்டுவார்கள்.
காதலிக்கும் போது கலகலப்பாக இருக்கும் ஆண்களில் பலர் திருமணம் முடிந்த உடன் சிரிப்பை மறந்து விடுகின்றனர். இதில்தான் பெண்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. எந்த குணத்தை விரும்பி காதலித்து திருமணம் செய்தார்களோ, அது மறைந்து போன உடன் வாழ்க்கையில் பிடிமானம் விட்டுப்போகிறது. எனவே சிடு சிடு என்று இல்லாமல் கலகலப்பாக இருங்கள்.அத்தகையவர்களையும், பெண்களின் கலகலப்பான, இயல்பான உணர்வை ஏற்றுக்கொள்ளும் ஆண்களைத்யும் தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மனைவியை எப்போதும் காதலியாகவே நினைக்கும் ஆண்களே அதிகம் விரும்பப்படுகின்றனர். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்துகொள்வானோ அதே போன்று திருமணத்திற்குப் பின்னரும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
நீங்கள் ஒரு காதலனாய் மாறி அவளிடம் ஒரு பூவை கொடுத்தால் அவளும் கூடை கூடையாய் பாசம் என்னும் பூக்களை உங்கள் மீது கொட்டத் தயாராக இருப்பாள். ஆகவே உங்கள் மனைவியை மதித்து காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக