கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தளவாய்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி(70). மனைவி செல்லம்மாள், மகன் கனகராஜ்(40), மருமகள் தனலட்சுமி, பேத்தி துர்கா(3) ஆகியோருடன் வசித்து வந்தார்.மயில்சாமிக்கு சொந்தமாக மூன்றரை ஏக்கர் பரப்பில் தென்னை மரங்களும், கறவை மாடுகளும் உள்ளன. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற மயில்சாமி, அங்கு படுகாயத்துடன் இறந்து கிடந்தார். வீட்டில் இருந்த கன கராஜை காணவில்லை. கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
தலைமறைவான கனகராஜை நேற்று கருட்டுப்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘முதல் நாள் இரவு தந்தை யிடம் ரூ.500 கேட்டேன். தரவில்லை. காலையில் மீண்டும் அவரை சந்தித்து கேட்டேன். மறுத்தார். ஆத்திரத்தில் அங்கிருந்த கட்டை மற்றும் மண்வெட்டியால் தாக்கிவிட்டு சென்று விட்டேன். அவர் இறந்து விட்டது தெரியவந்தது தலைமறைவானேன் என்று கூறியுள்ளார். கனகராஜை பொள் ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக