புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, காதல் தகராறில், தூக்கத்தில் இருந்த இளம் பெண், தீ வைத்துக் கொலை செய்யப்பட்டார்.அஞ்சுகோட்டை, பொட்டக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர், பிரதீப்,24. பிளஸ் 2 படித்த இவர், கீழ்க்குடி பாரதிராஜா என்பவரின் அண்ணன் மகளான, பி.எட்.,

படித்த பிரியதர்சினி,22, என்பவரை காதலித்து வந்தார்.

இதனால், இரு வீட்டார் இடையே, முன்விரோதம் இருந்து வந்தது. சில நாட்களுக்கு முன், காதலர்களை பிரித்து வைப்பது என, இரு வீட்டினரும் பேசி முடித்தனர்.

இந்நிலையில், அஞ்சுகோட்டை கருப்பணசுவாமி கோவில் விழாவிற்கு சென்ற பிரதீப்பை, பாரதிராஜா தாக்கினார். இத்தகவலை, கோவையில் வசிக்கும் அண்ணன் செங்கதிரிடம், பிரதீப் தெரிவித்தார். நேற்று ஊர் திரும்பிய செங்கதிர், தன் தம்பியை தாக்கியது குறித்து பாரதிராஜாவிடம் தகராறு செய்தார்.

அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். நேற்று முன்தினம் இரவு, 12.30க்கு பிரதீப் குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த பிரதீப் தங்கை யோகப்பிரியா,17, மீது பாரதிராஜா, இவரது மனைவி சுரேஷ்ராணி ஆகியோர் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டுத்தப்பி ஓடிவிட்டனர்.

காயமடைந்த யோகப்பிரியா, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று மதியம் இறந்தார். பிரதீப் புகார்படி, பாரதிராஜா, சுரேஷ்ராணியை, திருவாடானை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல், எஸ்.ஐ. பத்மாவதி ஆகியோர் கைது செய்தனர்.

பழிவாங்கவே மாணவி கொலை : கணவன், மனைவி வாக்குமூலம்


அண்ணன் மகளை காதலித்தவரை பழிவாங்கவே, அவரது தங்கையை கொலை செய்தோம் என்று கணவன், மனைவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை பொட்டக்கோட்டையைச் சேர்ந்தவர் யோகப்பிரியா,17. பிளஸ் 2 தேர்வு எழுதிய இவர் இரு தினங்களுக்கு முன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இவரை, கீழ்க்குடி கிராமத்தை சேர்ந்த கணவன், மனைவியான பாரதிராஜா, சுரேஷ்ராணி ஆகியோர் தீ வைத்து கொலை செய்தனர். இவர்களை, திருவாடானை போலீசார் கைது செய்தனர்.

இருவரது ஒப்புதல் வாக்குமூலம்: எங்களது உறவினர் மகள் பிரியதர்ஷினியை, பொட்டக்கோட்டை பிரதீப் காதலித்தார். இது எங்களுக்கு பிடிக்கவில்லை. ஊர்கூட்டம் போட்டு காதலர்களை பிரித்தோம். இருந்தாலும் பிரதீப், பிரியதர்ஷினியை காதலித்தது, மனதை பெரிதும் பாதித்தது. இதற்கு பழிவாங்கவே பிரதீப் தங்கை யோகப்பிரியாவை தீ வைத்து கொலை செய்தோம். இவ்வாறு கூறியுள்ளனர்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top