புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தமது அண்ணாவின் 70 வது பிறந்த தினத்தைக் கொண்டாட, பிரித்தானியாவில் இருந்து கனடா சென்ற தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை மாலை இவர்கள் கனடாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் சென்றுகொண்டு இருந்தவேளை, இவர்கள் பயணித்த காரின் டயர்
காத்துப்போயுள்ளது. தமது வாகனத்தை சரியாக ஒரு ஓரமான இடத்தில் பார்க் செய்யாமல், வீதியில் அதனை நிறுத்திவிட்டு கணவனும் மனைவும் காரில் இருந்து இறங்கி காத்துப்போன டயரைப் பார்வையிட்டுள்ளனர். அதே நேரம் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வந்த டிரக் வண்டி ஒன்று இவ்விருவர் மீதும் மோதியுள்ளது.

கணவர் ஜோர்ஜ் தேவராஜா (வயது 59) ஸ்தலத்திலேயே பலியானார். அவரது மனைவி வாமா தேவராஜா (வயது 57 ) மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமானார். இருவரும் யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரிட்டனில் வசித்து வந்தவர்கள் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது.

நெடுஞ்சாலை(மோட்டர்வே) செல்லும்போது பயணிக்கும் வாகனத்துக்கு ஏதாவது கோளாறு நேர்ந்தால் அதனை கவனமான ஒரு இடத்தில் தரிப்பது நல்லது. மற்றும் நெடுஞ்சாலையில் காரை விட்டு இறங்கி ரோட்டின் ஓரம் வருவது எவ்வளவு ஆபத்தான விடையம் என கனேடியப் பொலிசார் விளக்கியுள்ளனர்.


குறிப்பாக இவ்வாறு நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, வாகனக் கோளாறு ஏற்பட்டால், வாகனத்தி உடனே ஒரு ஓரமாகவும், பாதுகாப்பான இடத்திலும் பார் பண்ணிவிட்டு, உடனே உதவியை நாடுவதே நல்லது எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top