மணமகள் பிறிதொரு ஆடவனுடன் சென்றதினால் வெட்கம், ஆத்திரம் மேலிட்ட மணமகன் கல்யாணத் தரகரின் மகளை பலவந்தமாக இழுத்துச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் ஒன்று மினிப்பேயில் இடம்பெற்றுள்ளது.
கல்யாணத் தரகரின் மகளின் வயது 16 என்று மஹியங்கனைப் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மஹியங்கனைப் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் மணமகனையும் அவரது தந்தையையும் கல்யாணத் தரகரையும் கைது செய்துள்ளனர்.
கல்யாணத் தரகரின் மகள் மஹியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை மஹியங்கனை மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு ஆஜர் செய்யவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெவித்தனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, கல்யாணத் தரகரின் ஏற்பாட்டிற்கமைய இளைஞனொருவருக்கும் யுவதியொருவருக்கும் திருமணத்தை நடத்துவதற்கு 07.05.2012 அன்று திகதி குறிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் மணமகனின் பெற்றோரும் மணமகனும் மணமகளை முறைப்படி அழைத்து வர கல்யாணத்தரகருடன் சென்றனர். அவ் வேளையில் மணமகள் அங்கிருக்கவில்லை. திருமணத்திற்கு முதல் நாள் இரவே மணமகள் தனது காதலனுடன் தலைமறைவாகியுள்ளார்.
அதையடுத்து வெட்கம், ஆத்திரம் கொண்ட மணமகன் கல்யாணத்தரகரின் மகளை இழுத்துச் சென்று குடும்பம் நடத்தியுள்ளார். இது குறித்து மஹியங்கனைப் பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே பொலிசார் விரைந்து மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக