யூரோ கிண்ண கால்பந்து போட்டிகளை தொடர்ந்து 11 நாட்களாக இரவில் விழித்து ரசித்த சீன கால்பந்து ரசிகர் ஒருவர் இறந்து போனார்.சீனாவின் ஹனான் மகாணத்தில் உள்ள சாங்ஷா நகரத்தை சேர்ந்த 26 வயது ரசிகர் ஜியாங் ஷாசென். இவர் ஒரு கால்பந்து வீரரும் கூட யூரோ கிண்ண கால்பந்து போட்டி
தொடங்கியதிலிருந்து தினமும் இரவு விழித்து போட்டியை ரசித்து வந்துள்ளார்.
அந்நகரில் உள்ள ஒரு பாருக்கு சென்று பீர் அருந்தியவாரே அதிகாலை 5 மணி வரை போட்டியை ரசிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். போட்டி தொடங்கிய யூன் 8ம் திகதி முதல் 19ம் திகதி வரை தொடர்ச்சியாக 11 நாட்கள் இரவில் விழித்து போட்டியை பார்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ம் திகதி போட்டி முடிந்ததும் அதிகாலை 5 மணியளவில் வீட்டுக்கு வந்து படுத்துள்ளார். ஆனால் அதன் பின்பு அவர் எழுந்திருக்கவில்லை. அந்த ரசிகரின் தாயார் அவரை எழுப்ப முயன்ற போதே அவர் இறந்து போனது தெரிய வந்தது.
மருத்துவ பரிசோதனையில் உறக்கம் இல்லாமல் அதிகப்படியாக விழித்திருந்ததும், அதிகமாக பீர் குடித்ததும் மரணத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இறந்து போன ரசிகர் இங்கிலாந்து அணியின் தீவிர ரசிகர் என்றும் 19ம் திகதி இரவில் உக்ரேன், இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆட்டத்தை மிகுந்த மனஅழுத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
அதிகப்படியாக மது, நல்ல உறக்கம் இல்லாதது, சிகரெட் குடித்துக் கொண்டே கால்பந்து போட்டிகளை ரசிக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கால்பந்து ரசிகர்களுக்கு இதுபோன்று நடப்பது முதன்முறையல்ல, பல நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக