புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரான்சின் கை,கால் இழந்த நீச்சல் வீரனான Philippe Croizon தனது துணை நீச்சல் வீரரான Arnaud Chassery உடன் இணைந்து ஜந்து கண்டங்களை இணைக்கும் நீச்சல் சாதனை முயற்சியில் இறங்கியுள்ளார். மே மாதத்திலிருந்து ஓகஸ்ட் மாதத்திற்குள் அமெரிக்க பசுபிக் ஆசிய ஆபிரிக்க ஜரோப்பா
கண்டங்களினூடாக...

இவரது எல்லைகளை இணைக்கும் நீச்சலை முடிக்க உள்ளார்.இவர் 1994ம் ஆண்டு ஒரு தொலைக்காட்சிக்கான தகவல் வாங்கிக் கோபுரம் (Antenne) ஒன்றை கழற்றும் போது அது 20 ஆயிரம் வோல்ட் அதிமின் சக்திக் கம்பி மீது வீழ்ந்ததில் இவர் மீது பாய்ந்த அதிவலு மின்சாரத்தால் நிலத்தில் தூக்கியெறியப்பட்டார். அவ்விபத்தில் இவர் தனது இரு கால்களையும் இரு கைகளையும் இழக்க நேரிட்டது.

எனினும் விடாமுயற்சி இவரை இன்று உலகசாதனை அளவிற்கு உயர்த்தியுள்ளது.15 ம் திகதி ஜூன் மாதம் திட்டமிடப் பட்டிருந்த எகிப்திற்கும் ஜோர்டானிற்கும் இடையான நீச்சல் காலநிலைச் சீர்கேட்டினால் 21 ஜூன் வியாழக்கிழமை காலை எகிப்திய நேரம் 6h30 க்கு ஆரம்பமானது.

43 வயதுடைய Philippe Croizon நீச்சல் அணிகலன் கொண்ட செயற்கைக் காலைப் பொருத்தியபடி நீச்சலை ஆரம்பித்தார்.இவர் 2010ல் பிரான்ஸ் பிரித்தனியாவிற்கு இடைப்பட்ட Manche கடலைத் தாண்டி சாதனை படைத்ததில் இருந்து இவர் உலகப் புகழ் அடைந்துள்ளார்.

எல்லைகள் தாண்டிய நீச்சல்' என்ற இவரது நீச்சல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எகிப்து நேரம் 6h30ற்கு இவரது துணை நீச்சல் வீரர் Arnaud Chassery உடன் எகிப்தின் TABA வில் இருந்து ஆரம்பமான நீச்சல் பகல் 14h50ற்குக் கிட்டத்தட்ட 20 கிலோமீற்றர்களை அலைகளின் வேகத்தை எதிர்த்து ஊடறுத்து நீந்தி ஜோர்டானின் AQABA துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர் நீந்திக் கடந்த செங்கடலில் 40 வகைக்கும் அதிகமான சுறாக்கள் உண்டு. இவை எதுவும் இவரது முயற்சியை அசைக்கவில்ல. இவரை ஜோர்டானிய நீச்சல் வீரர்கள் இருவர் சிறிது தூரம் இணைந்து நீந்தி வரவேற்றனர். இதில் Mohammad Smadi என்பவர் கண்ணிவெடியில் சிக்கி இடக்காலை இழந்தவர். மற்றையவர் Mohammad Sawaai.

இவர் அமெரிக்கா பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற நடவடிக்கைக்கான பயிற்சியின் போது காயமடைந்தவர். கால்கள் இழந்தவர்களுக்கும் சாதாரணமானவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைத் தான் நீக்க விரும்புவதாக Philippe Croizon தெரிவித்தார்.

இவர் தனது நிகழ்ச்சி நிரலில் 17 மே அன்று பசுபிக்கில் உள்ள Papouasie-Nouvelle Guinée ற்கும் இந்தோனேசியாவிலுள்ள Pasar Skow ற்கும் இடையிலுள்ள தூரத்தை நீந்திக் கடந்தார்.

9 தொடக்கம் 15 ஜீலை ஜரோப்பாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையேயான Gibraltar நேர்கோட்டினை நீந்திக் கடக்க உள்ளார். இப் பாதையில் அதிகளவிலான கப்பல்போக்குவரத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பதனால் மிக ஆபத்தான பாதையாகும்.

அதனைத் தொடர்ந்து ஓகஸ்டில் பனிக்கடடியும் உறைநிலையும் கொண்ட ரஸ்யாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையிலான Béring நேர்நோட்டை நீந்திக் கடக்க உள்ளார். இவரது தன்னம்பிக்கை இவருக்குக் கால்களாகவும் கைகளாகவும் நீரை உந்தித் தள்ளியபடி செல்கின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top