புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஏற்கனவே இரண்டு கல்யாணம் செய்த தனது கணவர் மீண்டும் ஒரு கல்யாணத்திற்கு முயற்சித்து வந்ததால் ஆத்திரமடைந்த அவரது முதல் மனைவி, கணவரின் மர்ம உறுப்பில் கொதிக்கும் நீரை ஊற்றி அவரைப் படுகாயப்படுத்தினார்.


நெல்லை மேலப்பாளையம் ஆமின்புரம் ஆசுரான் கீழத்தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான். ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி ரெஜினா. அதன் பின்னர் மும்தாஜ் என்பவரை திருமணம் செய்த நாகூர் மீரான் அவரை மேலப்பாளையம் ராஜாநகரில் குடியமர்த்தினார். இந்த நிலையில் 3வதாக ஒரு பெண்ணுக்கு வலைவீசி திருமணத்திற்கு முயற்சி செய்தார்.

தன் கணவர் இப்படி சுற்றித் திரிகிறாரே என கவலை அடைந்த ரெஜினா மேலப்பாளையம் அம்பை சாலையை சேர்ந்த தனது அக்காள் பானுவிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். எனது கணவர் இப்போது 3வது திருமணம் செய்ய துடிக்கிறார். அதை எப்படியாவது தடுத்தி நிறுத்த வேண்டும். அதற்கு என்ன வழி என்று கேட்டுள்ளார். அதற்கு பானு தனது தங்கைக்கு சில ‘ஆலோசனைகளை’ கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டுக்கு வந்த நாகூர்மீரான் களைப்பில் வீட்டில் அமர்ந்தார். ரெஜினாவும், பானுவும் அங்கு வந்து உனக்கு 3வது கல்யாணமா கேட்குது, என்று கூறியவாறே எதிர்பாராத நேரத்தில் நன்றாக கொதிக்க வைத்த வென்னீரை எடுத்து மீரானின் மர்ம உறுபபில் ஊற்றினர். இதனால் அலறி துடித்த அவர் அங்கேயே உருண்டு பிரண்டார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலப்பாளையம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கணவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரெஜினா மற்றும் அவரது அக்காள் பானு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top