புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச்சென்ற பணிப்பெண்களில் 130பேர் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பினர், என்று இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். வேலைவாய்ப்பு பெற்றுச்சென்று அந்நாட்டு எஜாமான்களினால் சித்திரவதைகளுக்கு
உள்ளான நிலையில்,

சவூதியிலுள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்த பணிப்பெண்களில் ஒரு தொகையினரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர் என்றும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இத்தொகைப் பணிப்பெண்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை சவூதியிலுள்ள இலங்கை தூதரகமும் சவூதி அரசாங்கமும் இணைந்து மேற்கொண்டதாக அவர் கூறினார்.

இவ்வாறு நாடு திரும்பியவர்களில் பலருக்கு சம்பளம் எதுவும் கிடைக்காத நிலையிலேயே அவர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மேலும் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top