சீனாவில் 84 வயதாகும் முதியவர், பெண்ணாக மாற வேண்டும் என்று திடீரென முடிவெடுத்துள்ளார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராக இருக்கிறார்.சீனாவின் தென் பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் குயான்
ஜின்பேன். இப்போது வயது 84.
இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். இவருக்கு சிறுவயதில் இருந்தே பெண்ணாக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.
ஆனால் தனது ஆசையை இதுவரை மறைத்து வந்துள்ளார். இப்போது பகிரங்கமாக அதை வெளிப்படுத்திய குயான், மார்பகங்களை பெரிதாக்கும் ஹோர்மோன் மாத்திரைகளையும் சாப்பிடுகிறார். பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் தயாராகிவிட்டார்.
இதுகுறித்து குயான் கூறியதாவது, எனக்கு 14 வயதிருக்கும் போதே பெண்ணாக வேண்டும் என்ற நினைப்பு வந்தது. பெண்ணாக இருப்பத மிகவும் சிறந்தது என்று நினைத்தேன். தனியாக இருக்கும் போது இடுப்பை வளைத்து வளைத்து நடந்து பார்பேன். ஆனால் பெண்ணாக மாறுவதற்கு பல நடைமுறைகள் சிக்கலாக இருந்தன.
கடந்த 2009ஆம் ஆண்டு எழுத்தர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், தைரியமாக போஷன் கலாசார மையம், ரேடியோ, டிவி உள்பட எல்லா மீடியாக்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினேன். இப்போது என் பெயர் குயான் ஜின்பேன் இல்லை. என் பெயர் யிலிங்.
என் பெற்றோர், மனைவி, மகன், என்னுடன் பணிபுரிந்த ஒருவருக்கும், நான் பெண்ணாக இருப்பவன் என்று தெரியாது. இத்தனைக்கும் பெண்களை போலவே நான் நீண்ட தலைமுடி, பேன்ட், இறுக்கமான ஆடைகளை அணிந்துதான் எல்லா இடத்துக்கும் செல்வேன். ஆனால் யாரும் என்னை சந்தேகப்படவில்லை என்று தெரிவித்தார்.
இப்போது பெண்களை போலவே நடை, உடை, பாவனைகளை மாற்றிவிட்டார். பெண் உடை அணிந்து வரும் தன் கணவனுடன் தைரியமாக வெளியில் செல்லவும் இவரது மனைவி விரும்புகிறார். இவர்களை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக