புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பியகம பகுதியில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றினை சுற்றி வளைத்த பொலிஸார் நான்கு பெண்களையும் அவ் விடுதியின் நடத்துனரையும் கைது செய்துள்ளனர்.பியகம அசோக்க மாவத்தை பகுதியில் இயங்கி வந்த
விபசார விடுதியொன்றே இவ்வாறு சுற்றி வலைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐவரும் மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பியகம பகுதியில் விபசார விடுதியொன்று இயங்கி வருவதாக சப்புகஸ் கந்த பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நேற்று முன் தினம் அந்த விபசார விடுதியினை சப்புகஸ் கந்த பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.குறித்த விபசார விடுதியினை சுற்றி வளைத்த பொலிஸார் 30 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பெண்களையும் அவ் விடுதியினை நடத்தி வந்தவரையும் கைது செய்ததுடன் அங்கிருந்து ஆணுறைகள் சிலவற்றையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் அளவ்வ, பியகம மற்றும் யஹலதென்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களை நேற்று முன் தினம் மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். அதன்போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சந்தேக நபர்களை எதிர் வரும் 22 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சப்புகஸ் கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top