புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள குவாங்ஸி ஜுவாங் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆயிரக்கணக்கான வீடுகள் நொறுங்கின. 17 ஆயிரம் எக்டேர் நிலத்தில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் 11 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர் என்று பிராந்திய மக்கள் நலத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பல சாலைகள் அடித்து செல்லப்பட்டன. மின்சார சப்ளையும் நிறுத்தப்பட்டுள்ளது. பல அணைகள் நிரம்பி வழிகின்றன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் குவாங்ஸி பகுதி முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், பலத்த மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top