புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு மகள் தடையாக இருக்கிறாளே என நினைத்த தாய், டானிக்கில் விஷம் கலந்து மகளை கொன்ற சம்பவம் தமிழ்நாடு, தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

தர்மபுரி மாவட்டம் வேடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உமா. கணவனை இழந்த இவருக்கு லட்சுமி என்ற மகள் இருந்தாள்.

லட்சுமி-குமார் ஜோடிக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனிக்குடித்தனம் நடத்தும் இவர்கள் உமாவை அடிக்கடி பார்க்க வருவார்கள்.

அப்போது மருமகன் குமாருடன் உமாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருக்கத் தொடங்கினர்.

இந்த உறவு நிரந்தரமாகவும் இதற்கு மகள் லட்சுமி தடையாக இருப்பாளோ என்று நினைத்த உமா, குமாரிடம் ஆலோசனை பெற்று டானிக்கில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.

அப்போது குமாரின் தந்தை, தாய்க்கும் இந்த டானிக் கொடுக்கப்பட்டுள்ளது. டானிக்கை குடித்த சில நிமிடங்களில் மூவரும் மயங்க, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு லட்சுமி இறந்துவிட்டார். பின்னதாக நடந்த பிரேத பரிசோதனையில் லட்சுமிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்தது. இதுதொடர்பான பொலிஸ் விசாரணையில், உமாவும் குமாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top