புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பாகிஸ்தான் பிரஜை ஒருவரின் உடலுக்குள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவரைப் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

குறி;த்த நபர் பாகிஸ்தான் கராச்சி நகரிலிருந்து நேற்று முன்தினம் 23ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பயணிகள் வழக்கம்போல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ஒருவர் சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் விசாரணைகள் நடத்தியபோது அவரது வயிற்றுப் பகுதியில் ஹெரோயின் உருண்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபரின் உடலில் இருந்து ஏற்கனவே 20 ஹெரோயின் உருண்டைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சில உருண்டைகள் இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது...

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top